வவுனியாவில் கோதுமை மாவுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் இன்றைய கறுப்புச் சந்தையில் கோதுமை மா ஒரு கிலோகிராம் 420 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றதை அவதானிக்க முடிந்துள்ளது.
வவுனியாவில் வர்த்தக நிலையங்களில் கோதுமை மாவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. கோதுமை மாவுக்கான இறக்குமதிகள் வெகுவாக குறைந்து காணப்படுகின்றன.
இறக்குமதியாளர்களிடமிருந்து விநியோகஸ்தர்களுக்கு கோதுமை மா விநியோகம் இடை நிறுத்தப்பட்டுள்ளதாலேயே, வர்த்தக நிலையங்களில் கோதுமை மாவுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதனால் இன்றைய நிலையில் கறுப்புச் சந்தையில் ஒரு கிலோ கிராம் கோதுமை மா 420 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.