இளம்பெண்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆன்லைன் மற்றும் செல்போன்களில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கூறி வருகிறார்கள்.

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் வேல்சத்ரியன் (வயது 38), இவர் சினிமா படம் எடுப்பதாக கூறி பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அவரை ஆபாசமாக படம் எடுத்ததாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து வேல்சத்ரியன், அவரது உதவியாளர் ஜெயஜோதி (23) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர் நடத்திய அலுவலகத்தில் சோதனை செய்தபோது கம்ப்யூட்டர், பென்டிரைவ், ஹார்டு டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அதனை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதில் இளம்பெண்களிள் அரை நிர்வாண படங்கள் உள்பட பல படங்கள் இருந்தன. மேலும் சத்ரியன் இளம்பெண்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் நடத்திய விசாரணையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் படம் நடிக்கும் ஆசையில் அங்கு வந்ததாகவும், அவர்களிடம் தலா ரூ.30 ஆயிரம் வீதம் சுமார் ஒரு கோடி வரை வேல் சத்ரியன் வசூல் செய்ததாகவும் புகார் எழுந்தது.

இதற்கிடையே ஆன்லைன் மற்றும் செல்போன்களில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கூறி வருகிறார்கள்.

இதுகுறித்து துணை கமிஷனர் மாடசாமி தலைமயிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் சிறையில் உள்ள வேல் சத்திரியனின் பெண் உதவியாளர் ஜெயஜோதி (23) 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சேலம் கூடுதல் நீதிமன்றத்தில் போலீசார் மனுதாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அப்போது ஏராளமான பெண்களை சினிமா ஆசை காட்டி ஆபாச படம் எடுத்ததாகவும், அதனை வேல் சத்ரியன் விடிய விடிய இரவில் பார்த்து ரசித்து வந்ததும் தெரிய வந்தள்ளது.

மேலும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி அலுவலகத்தில் சூட்டிங் நடத்தி உள்ளார்.

அப்பெண்ணை ஏமாற்றும் வகையில் பொட்டச்சி என்ற படத்தில் கதாநாயகி நீதான் என கூறி அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது.

மேலும் ஏரோநாட்டிக்கல் படித்ததாக கூறும் ஜெயஜோதி சேலம் சட்டக்கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டு சேலம் வந்த நிலையில் அங்கு வேலைக்கு சேர்ந்ததும் தெரிய வந்தது.

வேல்சத்ரியன் காம சேட்டைகள் குறித்து முக்கிய தகவல்களை அவர் போலீசாரிடம் கூறி உள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணை முடிவில் மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

 

Share.
Leave A Reply

Exit mobile version