பிரித்தானிய அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்ட முதல் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நபர் என்ற வரலாற்றை ரணில் ஜெயவர்தன பெற்றுள்ளார்.

புதிய பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸின் முதலாவது அமைச்சரவையில் சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளராக ரணில் ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜோர்ஜ் யூஸ்டிஸுக்குப் பதிலாக ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 2015 இல் வடகிழக்கு ஹாம்ப்ஷயர் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

அவர் முன்னர் சர்வதேச வர்த்தக அமைச்சராக பணியாற்றினார், மே 2020 முதல் செப்டம்பர் 2022 வரை, அவர் வெளியுறவு செயலாளராக வருவதற்கு முன்பு லிஸ் ட்ரஸ்க்காக பணிபுரிந்தார்.

ரணில் ஜயவர்தன பொது சபையில் நுழைவதற்கு முன்னர், லாயிட்ஸ் வங்கியில் பணிபுரிந்தார், மேலும் ஹாம்ப்ஷயரில் கவுன்சிலராகவும் இருந்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version