எல்பிட்டிய – பகேல பிரதான வீதியில் எல்பிட்டிய நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் மிதி பலகையில் இருந்து பாடசாலை மாணவர் ஒருவர் தவறி விழும் காட்சி சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
இன்று (14) காலை பாடசாலை ஆரம்பிக்கும் முன்னர் குறித்த பேருந்து எல்பிட்டிய டிப்போவிற்கு அருகில் வேகமாக வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பேருந்தின் மிதி பலகையில் பயணம் செய்த சம்பந்தப்பட்ட பாடசாலை மாணவன் திடீரென தரையில் விழுந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.
விபத்தில் குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டு தற்போது எல்பிட்டிய ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே விபத்தில் சிக்கியுள்ளார்.