•கணவர் தனது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக பின்தொடர்ந்து அவர்களை மடக்கிப் பிடித்தார்.

•ஷிக்கந்த்ரா போலீசார் பெண்ணின் காதலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தனது மனைவி வேறொரு ஆணுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் உள்ள ஷிக்கந்த்ரா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியின் நெடுஞ்சாலையில் சம்பந்தப்பட்ட நபரின் மனைவி அவருடைய காதலருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார்.

பின்னாடியே அப்பெண்ணின் கணவர் தனது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக பின்தொடர்ந்து அவர்களை மடக்கிப் பிடித்தார்.


பின்னர், நடுரோட்டில் மனைவியை இழுத்துபோட்டு அடித்துள்ளார். இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து, ஷிக்கந்த்ரா போலீசார் பெண்ணின் காதலர் மீது பொது மக்களுக்கு தொந்தரவு தரக்கூடிய வகையில் செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version