சீனாவில் தொலை தொடர்பு அலுவலகத்துக்கு சொந்தமான 42 மாடி கட்டிடத்தில் நேற்று (16) பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

காற்றின் வேகத்தால் தீ கொழுந்து விட்டு எரிந்ததைப் பார்த்து மக்கள் அலறி அடித்து ஓடியுள்ளார்கள்.

தீயணைப்பு துறையினர் 280 தீயணைப்பு வாகனங்களை கொண்டு தீயை அணைக்க முயற்சித்தனர்.

கட்டிடத்தில் இருந்த பொருட்கள் தீயில் வெடித்து சிதறியதால், அருகாமையில் கட்டிடங்களில் இருந்த மக்கள் பீதி அடைந்தனர். 42 மாடி கட்டிடம் கொழுந்து விட்டு எரியும் வீடியோக்கள் வைரலாகின.

தீவிபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை.

Share.
Leave A Reply

Exit mobile version