இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 18 காலியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

Follow Us

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்! உடனே விண்ணப்பிங்க!

தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் உதவியாளர், பாதுகாவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 18 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.10.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: SSC CGL 2022: மத்திய அரசில் 20,000க்கும் அதிகமான பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தாளம்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட இசைப்பள்ளியில் தாளத்தில் சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,500 – 58,600

வேதபாராயணம்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஆகமப்பள்ளியில் வேதபாராயணத்தில் சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,700 – 50,000

உபகோயில் ஒதுவார்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வேதபாடசாலையில் ஓதுவார் துறையில் சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,600 – 39,900

உதவி பரிசாரகர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வேதபாடசாலையில் ஓதுவார் துறையில் சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000 – 31,500

உதவி யானைப் பாகன்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். யானைக்கு பயிற்சி அளிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800

கருணை இல்லக் காப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,900 – 50,400

கால்நடை பராமரிப்பு தொழிலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000 – 31,500

தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : கட்டட பொறியியலில் பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,600 – 65,500

ஜெனரேட்டர் ஆபரேட்டர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 16,600 – 52,400

பிளம்பர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,000 – 56,900

சமையல்காரர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,200 – 41,800

உதவி சமையல்காரர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800

துப்புரவு தொழிலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000 – 31,500

வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 01.07.2022 அன்று 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மீனாட்சி அம்மன் கோயில் அலுவலகத்தில் கிடைக்கும் விண்ணப்பத்தினை ரூ. 100 செலுத்தி பெற்றுக் கொள்ளவும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.10.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

Share.
Leave A Reply

Exit mobile version