Site icon ilakkiyainfo

ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை…! எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடி விட்டார்கள் -எம்.பிக்கள் கேலி

ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை…! எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடி விட்டார்கள் என எம்.பிக்கள் பா.ஜனதாவை கேலி செய்து உள்ளனர்.

சென்னை: 95 சதவீதம் பணி முடிந்த மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடிவிட்டார்கள் என்று விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாக்கூரும், மதுரை எம்.பி. சு.வெங்கடேசனும் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பா,ஜனதா தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் நூறிலிருந்து, இருநூற்று ஐம்பதாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து தமிழக பா,ஜனதாவின் டு விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ” மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95% முடிந்துள்ளன.

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் நூறிலிருந்து, இருநூற்று ஐம்பதாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அதை பிரதமர் திறந்து வைப்பார்” என்று கூறப்பட்டிருந்தது.

ஆய்வு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95% முடிந்துள்ளன.

எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் நூறிலிருந்து, இருநூற்று ஐம்பதாக அதிகரிக்கப்பட்டுள்ளது

எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அதை பிரதமர் திறந்து வைப்பார்..!

– தேசிய தலைவர் திரு.@JPNadda pic.twitter.com/Gujx8So3g7 — BJP Tamilnadu (@BJP4TamilNadu) September 22, 2022

இந்நிலையில் 95 சதவீதம் பணி முடிந்த எய்ம்ஸ் கட்டிடத்தை யாரோ திருடி விட்டார்கள் என்று எம்.பி.மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ” மதுரை எய்ம்ஸ் பணிகளை 95 சதவீதம் முடிந்த ஜே.பி. நட்டாவிற்கு நன்றி.

நானும், மதுரை எம்.பி.,யும் தோப்பூரில் ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை. கட்டிடத்தை யாரோ திருடிவிட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Exit mobile version