Site icon ilakkiyainfo

யாப்புத் திருத்தம் 22(22A) குறித்த உயர் நீதிமன்ற தீர்ப்பு – பாரதூரமான விளைவுகள்.(பகுதி 1).

வாசகர்களே!
சமீப காலமாக இலங்கை அரசியல் வட்டாரங்களில் அரசியல் யாப்புத் திருத்தம் தொடர்பான விவாதங்கள் காணப்படுகின்றன.

இவற்றில் அரசியல் யாப்பில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள 19வது திருத்தத்தினை மேலும் செழுமைப்படுத்தி புதிய திருத்தமாக அதாவது 21ம் திருத்தமாகவும், 22ம் திருத்தமாகவும் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

21வது திருத்தத்தினை எதிர்க்கட்சி சார்பில் சமகி ஜன பல வேகய (SJB)கட்சியின் சார்பில் அதன் செயலாளர் மத்தும பண்டார அவர்கள் சமர்ப்பிக்க, 22வது திருத்தத்தினைத் தனிநபர் பிரேரணையாக விஜயதாச ராஜபக்ஸ சமர்ப்பித்துப் பின்னர் அத் திருத்தம் அரசாங்கத்தின் பிரேரணையாக மாறியது.

இத் திருத்தங்கள் இரண்டும் உயர்நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற நிலையில் பல திருத்தங்கள் தேவையென நீதிமன்ற தீரப்பு வெளியாகியது.

இத் தீர்ப்புகள் ஒன்றிற்கொன்று முரணாக இருப்பதாக அரசியல் அமைப்பு நிபுணரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய டாக்டர். ஜயம்பதி விக்ரமரத்ன அவர்கள் இலங்கையிலிருந்து வெளியாகும் ‘த ஐலன்ட்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையில் தொடர்ச்சியாக மூன்று பிரிவுகளாக கட்டுரை வடிவில் வெளிப்படுத்தியிருந்தார்.

இக் கட்டுரையில் வெளியாகியுள்ள தகவல்களும், விவாதங்களும் இலங்கையில் அரசியல் அமைப்பு வடிவத்திலான ஆட்சியை எவ்வாறு மாற்றமடையச் செய்தன? அதனால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் எவை? என்பது குறித்து காத்திரமான விவாதமாக வெளிவந்துள்ளது.

இவை அரசியலை தொடர்ந்து அவதானிப்பவர்களுக்கும், அரசியலை கல்வியாக தொடர்பவர்களுக்கும் உதவும் எனக் கருதி தமிழில் தரப்படுகிறது.

யாப்புத் திருத்தம் 22(22A) குறித்த உயர் நீதிமன்ற தீர்ப்பு – பாரதூரமான விளைவுகள்.
ஜனாதிபதி சட்டத்தரணி : டாக்டர். ஜயம்பதி விக்ரமரத்ன
தமிழில் : வி. சிவலிங்கம்
பகுதி 1.
பிரதமரை நீக்குதல்
அரசியலமைப்பின் 22வது (22ஏ) திருத்தச் சட்டமூலம் தற்போதைய விக்ரமசிங்க-ராஜபக்ஸ அரசாங்கத்தினால் 2015ம் ஆண்டில் அரசியலமைப்பின் 19வது (19ஏ) திருத்தத்தின் மறுசீரமைப்பாக முன்வைக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் பெரும்பாலான விதிகள் 20வது (20ஏ) திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டன.

இக் கட்டுரையாளர் உட்பட பலர் 19ஏ இன் அனைத்து விதிகளையும் 22ஏ மசோதாவில் உள்ளடக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினர். 22ஏ மசோதா உயர்நீதிமன்ற விசாரணைக்கு முன்வைக்கப்பட்டது.

பெரும்பாலான சிங்கள தேசியவாதக் குழுக்கள் ஜனாதிபதி ஆட்சிமுறையை பெரும்பான்மை ஆதிக்கத்தின் பாதுகாப்பு உத்தரவாதமாகவே கருதுகின்றனர்.

‘நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை’ ஒழிக்கப்பட வேண்டும் என்பது ‘அறகலய’ சக்திகளின் குறிப்பிடத்தக்க கோரிக்கைகளில் ஒன்றாகும். அதனடிப்படையில் 19ஏ திருத்தத்தை நோக்கிச் செல்வது உடனடி நடவடிக்கையாகக் கருதப்பட்டது.

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ஆதரவு கணிசமான அளவு அதிகரித்திருந்தது.

கடந்த ஏப்ரல் இல் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் (CPA) நடத்திய ஆய்வில் 74 சதவீதமானோர் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க விரும்பவதாகவும், ஆரம்பத்தில் அதாவது 2021ம் ஆண்டு அக்டோபர் – நவம்பர் காலப் பகுதியில் 50.3 சதவீதமாகக் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு உள்ளது.

இதில் இவ்வாறு ஒழிப்பை ஆதரிக்கும் சிங்கள மக்களில் 74.2 சதவீதத்தை விட அதிகமாக இருந்தனர். இது சிங்கள தேசியவாதம் பின்வாங்கிச் செல்வதைத் தெளிவுபடுத்துகிறது.

உச்சநீதிமன்ற நீதியரசர்களாகிய சி. ஜே. அலுவிகார, ஒபயசேகர ஆகியோர் 22ஏ இன் பல முக்கிய விதிகளுக்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், வாக்கெடுப்பு மூலமான மக்களின் ஒப்புதலும் தேவை எனத் தீர்ப்பளித்தனர்.

அவற்றின் விபரம் வருமாறு
– பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கக்கூடாது.

– பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியால் அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள்.
– அரசியலமைப்பு சபையினரால் பரிந்துரைக்கப்பட்ட சுயாதீன ஆணைக் குழுக்களுக்கான நியமனங்கள் 14 நாட்களுக்குள் ஜனாதிபதியால் வழங்கப்படாவிடின் அவ் நியமனங்கள் வழங்கப்பட்டதாகக் கருதப்படும்.
இவ்வாறாகத் தெரிவிக்கப்பட்ட இம் மூன்று விதிகளும் 19ஏ இன் கீழ் உள்ள அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும்.

2015இல் உயர்நீதிமன்றம் பொது வாக்கெடுப்பு மூலமான மக்களின் ஒப்புதல் தேவையெனக் கருதவில்லை.

ஆனல் தற்போதைய உயர்நீதிமன்றத்தின் சிந்தனையில் தெளிவான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் நாடாளுமன்ற குழுநிலையில் சட்டமூலத்தைத் திருத்துவதன் மூலம் மக்கள் வாக்கெடுப்பைத் தவிர்க்கலாம் என அரசாங்கம் தெரிவித்தது.

எனவே அமைச்சர்களை நியமிப்பதில் ஜனாதிபதி பிரதமரிடம் மட்டுமே ஆலோசனை பெறவேண்டும் என்பதும், பாராளுமன்றத்தில் ஒரு பிரதமருக்கு பெரும்பான்மை இருப்பினும் அவரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யலாம் என்பதும் உறுதியாகிறது.

இதில் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்த்தன எச்சரிக்கையாக இருப்பது நலம்.

பிரதமர் நியமனமும், பதவி நீக்கமும்
இக் கட்டுரையாளரின் அபிப்பிராயப்படி அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற (நீதியரசர்கள் ஜெயசூர்ய, ஜனக் டி சில்வா, ஒபயசேகர ) அமர்வில் ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜன பலவேகய) இனர் சமர்ப்பித்த 21ஏ தொடர்பான வழக்குத் தீர்ப்பில் அதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு மக்கள் வாக்கெடுப்பு எனத் தெரிவித்த காரணத்தால் இங்கு ஆச்சரியப்பட எதுவுமில்லை.

கட்டுரையாளர் அத் தீர்ப்புடன உடன்பட முடியவில்லை. அவை பற்றிய விபரம் தொடரும் பகுதிகளில் உட்பொருளாக அமையும்.

ஆனால் நாடாளுமன்ற நம்பிக்கையைப் பெற்ற பிரதமரைப் பதவி நீக்கம் செய்வதற்கான ஜனாதிபதிக்குள்ள அதிகாரம் என்பது நிறைவேற்று அதிகாரத்தின் இன்றியமையாத அங்கமே எனத் தீர்மானித்துள்ளமை ஆச்சரியத்தைத் தருகிறது.

19வது திருத்தம் 47ஏ பிரிவின் கீழ் பிரதமரை நீக்குவதற்கான ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பறித்தது.

அதனால் பிரதமரை நீக்குவது என்பது நாடாளுமன்றத்தின் அதிகாரமாக மாறியது.

புதிய உறுப்புரையான 48(2) இல் நாடாளுமன்றம் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை நிராகரித்தால் அல்லது அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நிறைவேற்றினால் அமைச்சரவை கலைக்கப்படும். அதன் பின்னர் ஜனாதிபதி புதிய பிரதமரை நியமிக்க முடியும்.

20ஏ மசோதா பிரதமரை நீக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்குகிறது. இம் மசோதா உயர்நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இருப்பினும் மக்கள் மீது நம்பிக்கை கொண்டு நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டுள்ள ஜனாதிபதி அமைச்சரவையின் தலைவராகவும், பிரதமரை நியமிக்கும் அதிகாரியாகவும் இருப்பதைக் கருத்தில் கொண்டு ஐவரைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. இதன் பிரகாரம் ஜனாதிபதியே பிரதமரை நீக்கி புதிய பிரதமரை நியமிக்க அதிகாரம் உள்ளவர்.

ஏனெனில் ஜனாதிபதியின் கருத்துப்படி நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை, மக்களின் இறையாண்மையை அவர் மீறவில்லை என்பதாகும்.

அத்தகைய நீக்குவதற்கான அதிகாரம் என்பது நிர்வாக அதிகாரத்தின் இன்றியமையாத பகுதி என நீதிமன்றம் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

ஆனால் நியமன அதிகாரிக்கும் நீக்குவதற்கான அதிகாரம் உள்ளது என்ற அடிப்படையில் நோக்கப்பட்டதாகவே கருத முடியம்.

ஆனால் 22ஏ தொடர்பான வழக்கில் சட்ட மா அதிபரின் கருத்துப்படி பிரதமர் பதவி விலகினால் அல்லது நடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறத் தவறினால் மட்டுமே பிரதமரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றம் ஒரு பிரேரணையை முன்வைப்பது மிகவும் பொருத்தமானது எனவும் சமர்ப்பித்தார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா நிலை என்பது தொடர்பாக சட்ட மா அதிபரின் கருத்துப்படி பிரதமரைப் பதவியிலிருந்து நீக்குவதில் ஜனாதிபதி தனது சொந்த விருப்பத்தின் பேரில் செயற்படுவதுடன் நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை பிரதமரால் தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியாது என அவர் கருதுவது தன்னிச்சையான அதிகார பிரயோகத்திற்கு சமமானது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இது குறித்த நீதிமன்றத்தின் பதில் என்னவெனில் 20ஏ இன் கீழ் பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. பிரதமர் பதவியை நீக்கம் செய்யக்கூடிய சூழ்நிலைகள் என்பது

நாடாளுமன்றத்தின் நம்பிக்கையுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக அமைய முடியாது.

அந்த உரிமையைப் பறிப்பது தற்போது நிலவும் அதிகார சமநிலையைப் பாதிக்கிறது எனவும், மக்களின் இறையாண்மையில் தலையிடும் வகையில் நிறைவேற்று அதிகாரங்கள் கைவிடப்படுவதற்கும், பறிப்பதற்கும் சமம் என நீதிமன்றம் கருதியது.

இங்கு அதாவது 20ஏ மற்றும் 22ஏ ஆகிய இரண்டு வழக்குகளிலும் கற்றறிந்த நீதிபதிகள் தவறிழைத்துள்ளார்கள் என்பதை மிகவும் மரியாதையுடன் சமர்ப்பிக்கப்படுகிறது.

19ஏ, 20ஏ ஆகிய இரு மசோதாக்களிலும் பிரதமர் நியமனம் தொடர்பாக ஒரே மாதிரியான ஏற்பாடு இருந்தது.

ஜனாதிபதியின் கருத்துப்படி நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினரை ஜனாதிபதி பிரதமராக நியமிப்பார் என்பதும், 20ஏ இன் வழக்கின்போது கற்றறிந்த நீதிபதிகளின் கவனத்திலிருந்து தப்பிய ‘அதிகம்’ (அழளவ) என்ற வார்த்தை ஜனாதிபதியின் கருத்துப்படி நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறக்கூடியவர் எனக் கருதினர்.

பிரதமரை நியமிக்கும் விவகாரத்தில் ஜனாதிபதிக்கு விருப்புரிமை இல்லை என்பது தெளிவாகிறது.

அவர் தனது கருத்துப்படி நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறக்கூடிய ‘நாடாளுமன்ற உறுப்பினர்’ அவசியம் நியமிக்கப்பட வேண்டும்.

உறுப்புரை 42(4) இன் பிரகாரம் சிங்கள மொழிப் பதிவில் மிகத் தெளிவாக (visvaasaya uparima athi) ‘அதிக நம்பிக்கை’ ( utmost confidence) என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி மேலும் தெளிவாகத் தரப்பட்டுள்ளது.

எனவே அரசியலமைப்பின் தேவைக்கு ஏற்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே இருக்க முடியும். அந்த உறுப்பினருக்கு பிரதமராக நியமனம் பெற உரிமையுண்டு. ‘ சம பாதுகாப்பு’ (Equal protection )

நம்பிக்கையைப் பெறக்கூடியவர் எனக் கருதினர். பிரதமரை நியமிக்கும் விவகாரத்தில் ஜனாதிபதிக்கு விருப்புரிமை இல்லை என்பது தெளிவாகிறது.

அவர் தனது கருத்துப்படி நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறக்கூடிய ‘நாடாளுமன்ற உறுப்பினர்’ அவசியம் நியமிக்கப்பட வேண்டும்.

உறுப்புரை 42(4) இன் பிரகாரம் சிங்கள மொழிப் பதிவில் மிகத் தெளிவாக ( visvaasaya uparima athi) ‘அதிக நம்பிக்கை’ (utmost confidence ) என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி மேலும் தெளிவாகத் தரப்பட்டுள்ளது.

எனவே அரசியலமைப்பின் தேவைக்கு ஏற்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே இருக்க முடியும்.

அந்த உறுப்பினருக்கு பிரதமராக நியமனம் பெற உரிமையுண்டு. ‘ சம பாதுகாப்பு’ ( Equal protection )) என்ற சொற்றொடரைப் பயன்படுத்த பிரதம மந்திரி அலுவலகம் என்பது தனிநபர் வகுப்பாகவும், வகுப்பு என்பது (class) ஒரே ஒரு மனிதரைக் கொண்டதாகும்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் ‘அதிக நம்பிக்கை’ கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்பது அகற்றப்பட்டுள்ளது.

இங்கு ஒரு தனிநபர் வகுப்பாக இருக்க உரிமையுள்ள ஒருவரை நீக்குவதற்கான அதிகாரத்தை வழங்குவது தன்னிச்சையானது எனச் சமர்ப்பிக்கப்பட்டது.

பொது நம்பிக்கைக் கோட்பாடு (Public Trust Doctrine )

எமது நீதிமன்றங்கள் எண்ணற்ற சந்தர்ப்பங்களில் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான பொது நம்பிக்கைக் கோட்பாட்டினை மீண்டும், மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

2002ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 19வது திருத்தத்தில் இக் கோட்பாடு ஒரு அரசாங்கத்தின் உறுப்பானது மற்றொரு உறுப்புடன் மேற்கொள்ளும் தொடர்புகள் பற்றிக கூறுகிறது.

இந்த அதிகாரமென்பது அரசின் மற்றொரு உறுப்புடனான பரீட்சிப்புகளுடன் தொடர்புடையாது என ஏழு உறுப்பினர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு தெரிவித்திருந்தது.

அரசாங்கத்தின் ஒரு உறுப்பு மற்றொன்றுடன் தொடர்புள்ளது என்பது சகல சந்தர்ப்பங்களிலும் அவதானிக்கப்பட வேண்டும்.

மற்றும் தேவைப்படும் இடங்களில் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும்.

இது ஒன்றும் புதிதான கருத்து அல்ல. அதிகாரம் என்பது நம்பிக்கையில் தங்கியுள்ளது என்பதே பொதுச் சட்டத்தின் அடிப்படையாகும்.
நாடாளுமன்றம் முறையாக இயங்கும்போது பிரமதரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத்தின் நம்பிக்கைக்குட்பட்டது என்பது கோட்பாட்டை மீறுவதாகும்.

22ஏ இந்த நிலமைக்கு மாற்றீடாக 19ஏ இல் தரப்பட்டது போல பிரதமரை நீக்கும் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை நீக்கி நிலமையைச் சரி செய்ய முயற்சிப்பது போன்றதாகும்.
(தொடரும் )

 

Exit mobile version