சீனாவில் அதிபர் ஜீ ஜின்பிங்கு எதிராக படையினர் புரட்சி செய்து அவரை சிறையில் அடைத்து விட்டதாக பல இந்திய ஊடகங்கள் 2022 செப்டம்பர் 24-ம் திகதி செய்தி வெளியிட்டன.

இந்தியாவைப் பொறுத்தவரை சீனாவில் ஒரு பெரிய குழப்ப நிலை என்பது Too good to be true. ஆனால் சீனாவைப் பற்றி அதிகம் அறிந்து வைத்திருக்கும் ஜப்பான் மற்றும் தென் கொரிய ஊடகங்கள் அப்படி ஒரு செய்திகளை வெளிவிடவில்லை.

அது மட்டுமல்ல உறுதிப்படுத்தப்பட முடியாத செய்திகளை முந்தியடித்து வெளிவிடுவதை வழமையாக கொண்ட பிரித்தானிய Daily Mail, அமெரிக்க Washington Post ஆகியவை ஜீ ஜின்பிங்க் கைது பற்றி ஏதும் செய்திகளை வெளிவிடவில்லை.

 

பொய் சொல்லும் ஜெய் ஹிந்த் கும்பல்

ஜெய் ஹிந்த் என தமது உரையாடல்களை முடிக்கும் இந்திய youtube channels பொய்ச் செய்திகளை வெளியிடத் தயங்காதவரகள், மேஜர் மதன்குமார் என்பவர் பாக்கிஸ்த்தானின் பலுச்சிஸ்த்தான் மாகாணத்தைப் பற்றிய கலந்துரையாடலில் உலகில் தனது சொந்த நாட்டு மக்கள் மேல் விமானத்தில் இருந்து குண்டுகளை வீசிய ஒரே நாடு பாக்கிஸ்த்தான் எனப் பொய்யுரைத்தார்.

இந்தியா 1966இல் மிஸ்ரோம் மக்கள் மீது குண்டு வீசியமையையும் இந்தியா உட்பட பல நாடுகளின் உதவியுடன் இலங்கை விமானப் படையினர் பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தமையையும் ஒரு வாக்கியத்தில் மதன் குமார் மறைக்க முயன்றார்.

இன்னும் ஒரு youtube channel இல் B-21 Raider போர் விமானங்களை இந்தியா உற்பத்தி செய்வதாக புரட்டினார்.

ஆனால் அவை அமெரிக்காவின் விமானங்களாகும். கடந்த சில ஆண்டுகளாக இந்திய youtube channels பார்த்தால் இன்னும் சில நாட்களில் சீனா தன் படைக்கலன்களுடன் இந்தியாவிடம் சரணடைந்து விடுபது போலத் தோன்றும்.

ஈழ விடுதலையையும் தமிழ்த்தேசியத்தையும் கொச்சைப் படுத்துவதற்கு அவர்களுக்கு கூலி கிடைக்கின்றதா என எண்ணத்தோன்றும்.

தமிழர்களைப் பொறுக்கி என அழைக்கும் சுப்பிரமணியன் சுவாமி தன் பதிவை நீக்கி விட்டார்.:

ஜின்பிங்கிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள்

சீனாவின் புரட்சி நடந்தமைக்கு ஆதாரமாக சீனாவில் இருந்து 6,000 விமானப் பறப்புக்கள் இரத்து செய்யப்பட்டன என்பதை முதலாவது ஆதாரமாக முன்வைத்துள்ளன.

சீனாவில் பல விமானப் பறப்புக்கள் இரத்துச் செய்யப்பட்டன என்றன. சீனாவில் போர் ஒத்திகை நடக்கும் போது விமானப் பறப்புகள் இரத்துச் செய்யப்படுவதுண்டு.

சீன விமானச் சேவைகளின் இணையத்தளங்களில் பறப்பு இரத்துப் பற்றி பெரிதாக எதுவும் இருந்திருக்கவில்லை.

SCO மாநாடு முடிய முன்னரே ஜீ ஜின்பிங் உட்பட பல சீனப் பிரதிநிதிகள் உஸ்பெக்கிஸ்த்தான் நகர் சமர்கண்ட் நகரில் இருந்து அவசரமாக நாடு திரும்பினர் என்பது இரண்டாவது ஆதாரமாக முன் வைக்கப்படுகின்றது.

2022 ஒக்டோபர் 16-ம் திகதி சீனப் பொதுவுடமைக் கட்சியின் மாநாடு நடக்கவிருக்கின்றது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக்கும் அம்மாநாட்டிற்கான ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் அவசரமாக நாடு திரும்பினர்.

முன்றவது ஆதாரமாக சீனாவில் படையினர் நடமாட்டம் அதிகமாக உள்ளதை வெளிப்படுத்தும் காணொலிகள் வெளிவந்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டது.

Republic என்ற இந்திய ஊடகம் சீனாவில் 80கிலோ மீட்டர் நீளமான பார ஊர்தி படை வண்டிகள் தலைநகர் பீஜிங்கை நோக்கி நகர்வதாக செய்தி வெளியிட்டது.

ஆனால் அக்காணொலி ஒரு சில செக்கண்டுகள் மட்டுமே காட்டப்பட்டன். 80கிமீ என்பது போலிச் செய்தி.

இந்திய ஊடகங்கள் முன் வைக்கும் நான்காவது ஆதாரம் சீன அதிபர் எங்குள்ளார் என்பது பற்றி எந்த ஒரு சீன ஊடகமும் செய்தி வெளிவிடவில்லை என்பதாகும்.

69 வயதான ஜீ ஜின்பிங்க் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் சீனர்கள் தம்மைத் தனிமைப் படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

அதையே அவரும் கடைப்பிடித்தார். சில இந்தியர்கள் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி மக்கள் சீனப் படைத்தளபதி லி கியோமிங் விரைவில் சீன அதிபராகுவார் என தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் Newsweek சஞ்சிகையின் இணையத்தளம் சீனா அதிபர் கைதுச் செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் வலம் வருகின்றன என்றது.

பொய்யாக முன்வைத்த “பின்னணி

ஜின்பிங் தைவானைக் கைப்பற்ற அவசரப்படுகின்றார் ஆனால் சீனப் படைத்துறையினர் தயக்கம் காட்டுகின்றனர்.

அதனால் ஜின்பிங்குடன் படையினருக்கு பிணக்கு அதனால் அவர்கள் உஸ்பெக்கிஸ்த்தானில் இருந்து நாடு திரும்பியவுடன் ஜின்பிங்கை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர் என்ற வகையிலும் வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன.

2022 ஒக்டோபர் 10-ம் திகதி நடக்கவிருக்கும் சீனப் பொதுவுடமைக் கட்சியின் மாநாட்டில் ஜீ ஜின்பிங் மூன்றாவது தடவையாக சீன அதிபராக பதவி ஏற்கும் வாய்ப்பு உள்ளது.

அதன் பின்னர் அவர் இறக்கும் வரை சீன அதிபராக இருப்பார் என எதிர் பார்க்கப்படுகின்றது.

இதை பல பொதுவுடமைக் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் விரும்பவில்லை எனக் கருதப்படுகின்றது.

ஊழலை ஒழிக்கவும் ஜக் மா உட்படப் பல செல்வந்தர்கள் அளவிற்கு மிஞ்சி செல்வம் சேர்ப்பதை தடுக்கவும் ஜீ ஜின்பிங்க் கடுமையாக செயற்பட்டார். அதனால் அவருக்கு பொதுவுடமைக் கட்சியில் எதிரிகள் அதிகரித்துள்ளனர்.

ஊழல் செய்தவர்கள் பலரை ஜின்பிங் சிறையில் அடைத்துள்ளார். கொவிட்-2019 பெருந்தொற்று நோய்க்கு எதிராக சுழிய-பொறுமைக் கொள்கையை (Zero-Tolerance policy) ஜின்பிங் கடைப்பிடிப்பதால் சீனாவின் உற்பத்தித் துறையும் பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பல உற்பத்தியாளர்கள் ஜின்பிங் மீது வெறுப்புக் கொண்டுள்ளனர்.

மோடியின் கேடி வால்பிடிகள்

சில மோடி ஆதரவாளர்கள் மோடியைச் சந்தித்த வெளிநாட்டுத்தலைவரகள் பதவி இழக்கும் அளவிற்கு அவரிடம் அதிசய சக்தி உள்ளது எனக் கதை அளந்தனர்.

டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலின் பெஞ்சமின் நெத்தன்யாஹூ, பிரித்தானியாவின் பொறிஸ் ஜோன்சன் ஆகியோரின் வரிசையில் ஜீ ஜின்பிங்கும் இணைந்துள்ளார் என்றனர்.

டுவிட்டரில் சில இஸ்லாமியர்களுக்கும் சில இந்துக்களுக்கும் கடும் மோதல் நடப்பது வழமை. ஜீ ஜின்பிங் என போலிச் செய்தி வெளியிட்ட இந்துக்களை இஸ்லாமியர்கள் கழுவி ஊற்றுகின்றார்கள்.

ஜின்பிங் கைது செய்யப்பட்டதாக பொய்யாஅ செய்தி வெளியிட்ட youtube பதிகளை அதன் மொக்கை இரசிகர்கள் “ஆகா அற்புதமான ஆய்வு” என தொடர்ந்தும் வழமையான புளுகித் தள்ளி பின்னூட்டமிடுதலை செய்து கொண்டே இருக்கின்றார்கள். பல டுவிட்டர் பதிவுகள் இந்திய டுவிட்டர் பதிவுகளை கிண்டல் செய்தன:

 

உண்மையில் பொதுவுடமைக் கட்சியில் ஜீ ஜின்பிங்கின் எதிரிகளாக கருதப்படுபவர்களை தூக்கிலிட்டும் சிறையிலடைத்தும் தன் இருப்பை வலிமைப் படுத்திக் கொண்டிருக்கின்றார்.

சீனாவை எப்படி முன்னேற்றி உலகின் முதல்தர நாடாக்குவது என்ற கனவுடன் சீனர்கள் செயற்படுகின்றார்கள்.

பாவம் இந்தியர்கள் மனுதர்ம சாஸ்த்திரத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு அடுத்த நாடு எப்போ சீரழியும் என்ற கனவுடன் அலைகின்றார்கள்.

உலக நாடுகளின் அசாதாரண நிகழ்வுகள் நடந்தால் தங்கத்தின் விலை மிகவும் அதிகரிக்கும்.

நாணயங்களின் பெறுமதி குறையும் பங்குச் சந்தையில் விலைச் சுட்டெண் சரியும். அப்படி ஏதும் நடக்கவில்லை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடக்கவில்லை.

-வேல்தர்மா-

Share.
Leave A Reply

Exit mobile version