ராகம வைத்தியசாலையில் சம்பவம்

சுகாதார அமைச்சு அறிக்கை கோரல்

திருமணமான இளம் பெண்ணொருவர் சத்திரசிகிச்சையின் போது ஏற்பட்ட தவறினால்

உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு ராகமை வைத்தியசாலையிடம் அறிக்கை கோரியுள்ளது.

இலக்கம் 199/A தெலத்துர ஜா-எல பிரதேசத்தில் வசித்து வந்த புத்திக்க ஹர்ஷனி தர்மவிக்கிரம என்ற திருமணமான இளம்பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சுகாதார அமைச்சு ராகமை வைத்தியசாலைக்கு அறிக்கை கோரியுள்ளது.

பித்தப்பையில் கற்கள் இருந்த்தையடுத்து கடந்த 31ஆம் திகதி வத்தளையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.

ராகமை வைத்தியசாலையில் 25 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 25ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

வத்தளை தனியார் வைத்தியசாலையில் உரிய பராமரிப்பின்றி மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையினால் தனது சகோதரி மிகவும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக அவரது சகோதரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

திருமணமாகி ஒரு மாதமும் சில நாட்களும் ஆன இளம் பெண் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version