பல்கலைக்கழக மாணவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என பாராளுமன்றத்தில்
உள்ள திருடன் கூறுவதாக எதிர்க்கட்சி எம்.பி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா கடும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், பல்கலைக்கழக மாணவர்கள் மேல் கை வைக்கும் அமைச்சர், இராஜாங்க அமைச்சர்களுக்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது பாடம் புகட்டுவேன் எனவும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளவர்கள் எதிர்க்கட்சியினரின் முதுகில்
குத்துகிறார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் என இவர்கள் என்னை
விமர்சிக்கிறார்கள். கல்விகற்ற அறிவார்ந்த இளைஞர்கள் அவர்களது நிகழ்வுகளுக்கு எனக்கு
அழைப்பு விடுத்தால் அதில் சிரேஷ் பிரஜை என்கிற வகையில் நான் கலந்துக்கொள்வேன் என்றார்.

இவ்வாறு நான் கலந்துக்கொள்வதால் என்னை போராட்டக்காரன் எனவும், பயங்கரவாதி எனவும்
விமர்சிக்கிறார்கள். நான் பயங்கரவாதியல்ல. உலகின் படுமோசமான பயங்கரவாத அமைப்பை
இந்நாட்டிலிருந்து துடைத்தெறிந்திருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version