• உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களுள் மெஸ்ஸியும் ஒருவர். இவர் 2006-ம் ஆண்டு அர்ஜென்டினாவுக்காக முதல் முறையாக உலக கோப்பையில் களமிறங்கினார்.
  • இவர் 2006-ம் ஆண்டு அர்ஜென்டினாவுக்காக முதல் முறையாக உலக கோப்பையில் களமிறங்கினார்.

பியூனஸ் அயர்ஸ்:

உலக கோப்பை கால்பந்து திருவிழா அடுத்த மாதம் கத்தாரில் தொடங்குகிறது. உலக கோப்பை கால்பந்தில் ஆதிக்கம் செலுத்திவரும் அணிகளில் ஒன்றான அர்ஜென்டினாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் லியோனல் மெஸ்ஸி.
உலகின் ‘ஆல் டைம்’ தலை சிறந்த கால்பந்து வீரர்களுள் மெஸ்ஸிக்கு எப்போதும் தனி இடமுண்டு. 2006-ம் ஆண்டு அர்ஜென்டினா அணிக்காக முதல் முறையாக உலகக்கோப்பையில் களமிறங்கினார்.
இந்நிலையில், இந்தாண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து தொடரே தனது கடைசி கால்பந்து உலக கோப்பை என மெஸ்ஸி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஒரு நேர்காணலில் பேசிய மெஸ்ஸி, நிச்சயமாக இது என்னுடைய கடைசி உலக கோப்பை. இந்த முடிவை எடுத்துவிட்டேன். உலக கோப்பைக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். என்ன நடக்கப் போகிறது, இந்த உலக கோப்பை தொடர் எப்படிப் போகப்போகிறது என்ற பதற்றம் உள்ளது. இந்த தொடர் எங்களுக்கு சிறப்பாக செல்ல நான் ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார். மெஸ்ஸியின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Share.
Leave A Reply

Exit mobile version