கொழும்பு – காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (07)  இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு காணாமல்போன சிறுவன் கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவராவார்.

இன்று வெள்ளிக்கிழமை பகல் 2 மணியளவில் ஏழு நண்பர்களுடன் கொழும்பு காலிமுகத்திடல் கடற் கரைக்கு குறித்த சிறுவன் சென்றுள்ளார்.

குறித்த பகுதியில் மக்கள் ஒன்று திரண்டுள்ளதுடன் சிறுவனை தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version