மத்தியப் பிரதேச மாநிலம், பெதுல் மாவட்டம், சாய்கேடா கிராமத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வந்தனர்.

மது பழக்கத்துக்கு அடிமையான கணவரால், வீட்டில் தினமும் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. தொடர் சண்டைகளால் அண்மையில் கணவன் வீட்டிலிருந்து வெளியேறிய மனைவி, தன் அம்மா வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

மனைவி வீட்டைவிட்டு வெளியேறியதால் ஆத்திரமடைந்த நபர், அவரைக் கொலைசெய்ய திட்டமிட்டிருக்கிறார்.

உடனே புறப்பட்டு தன் மனைவி வசிக்கும் மாமனாரின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில், வீட்டின் நுழைவாயிலில் இருக்கும் இரும்பு கேட்டில் மின்சாரத்தைப் பாயவிட்டிருக்கிறார்.

அதை தன் மனைவி தொட்ட நொடியில் இறந்துவிடுவார் என நினைத்தபடி காத்திருந்திருக்கிறார்.

ஆனால், எதிர்பாராதவிதமாக மனைவியின் தாயார் அந்த கேட்டை திறந்திருக்கிறார். அதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதைத் தொடர்ந்து, அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது தொடர்பாக தகவலறிந்து அங்கு விரைந்த போலீஸார், இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவுசெய்து தலைமறைவான கொலையாளியை தேடி வருகின்றனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version