மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
புதுகுடியிருப்பு, சிறுவர் இல்லம் முன்பாகவுள்ள வளைவு பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாகச்சென்று வாகனமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மோட்டார் சைக்கிளை மோதிய வாகனம் தப்பிச் சென்றுள்ள அதேவேளை மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லையென்பதுடன் அதிகவேகத்துடன் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் 16 மற்றும் 18வயதுடைய சிறுவர்கள் எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.