தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி உள்ள நிலையில் ஒவ்வொரு தினமும் மிக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசன்களாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும். இந்த முறை, பிக்பாஸ் 6 வது சீசன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
இதனால் தொடர்ந்து பிக்பாஸ் குறித்த விஷயங்கள், இணையத்தில் எப்போதுமே ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. அந்த வகையில், தற்போது ஜிபி முத்து அழுதது தொடர்பான விஷயம்,
இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது. வந்த முதல் நாள் முதல், ஜிபி முத்து செய்யும் அனைத்து விஷயங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
கமலிடம் பேசியது, மழையில் நனைந்தபடி நடனமாடியது, சக போட்டியாளர்களுடன் உற்சாகமாகி தனக்கே உரித்தான பாணியில் பேசுவது என ஜிபி முத்துவின் செயல்பாடுகள் அனைத்துமே பெரிய அளவில் வைரலாகியும் வருகிறது.
அப்படி ஒரு சூழ்நிலையில், திடீரென ஜிபி முத்து கண்ணீர் விட்ட விஷயம் தான் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை உண்டு பண்ணி உள்ளது.
மொத்தமுள்ள 20 போட்டியாளர்களும் 4 அணியினர்களாக பிரிக்கப்பட்டு சமையல், வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றனர்.
இதில், ஜிபி முத்து பாத்திரம் கழுவும் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், அதே அணியில் தனலட்சுமி, ஆயிஷா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக, ஜிபி முத்து செய்வது தனக்கு பிடிக்கவில்லை என கேமராவை பார்த்து தனலட்சுமி கூறி இருந்தார்.
அப்படி ஒரு சூழ்நிலையில், இருவருக்கும் இடையே மோதலும் நேரடியாக வெடித்தது. தனக்கு மரியாதை தரவில்லை என தனலட்சுமி ஜிபி முத்துவை கூற, இதனால் ஜிபி முத்துவும் கடுப்பாகிறார்.
மேலும், தான் மன்னிப்பு கேட்ட பிறகும் அவர் என்னை முறைத்து பார்த்தார் என ஜிபி முத்து சொல்கிறார்.
இதன் பின்னர், போட்டியாளர்கள் அனைவரும் ஜிபி முத்து – தனலட்சுமி விவகாரம் குறித்து பேசிக் கொண்டிருகின்றனர்.
அப்போது ஜிபி முத்து நடிப்பதாக தனலட்சுமி கூற, இதனால் கோபப்பட்ட ஜிபி முத்து அவரிடம் நேரடியாக பேசுகிறார். இது பெரிய விவகாரமாக, அங்கே பரபரப்பும் தொற்றிக் கொண்டது.
இதன் பின்னர் தான் நடிப்பதாக தனலட்சுமி கூறியதால் மனமுடைந்த ஜிபி முத்து, கண்ணீர் விடவும் ஆரம்பித்தார்.
தான் நடிக்கவா செய்கிறேன் என சக போட்டியாளர்களிடம் கேட்டுக் கொண்டே அழுத ஜிபி முத்துவை அனைவரும் தேற்ற ஆரம்பித்தார்கள். எப்போதும் கலகலப்பாக இருக்கும் ஜிபி முத்து, திடீரென அழுத விஷயம் தொடர்பான வீடியோக்கள், இணையத்தில் வைரலாகி வருகிறது.