உக்ரைனுக்கு எதிரான போருக்கு தேவையான ராணுவ படைகளை திரட்ட ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார்.
ரஷிய ராணுவ வீரர்கள், மகிழ்ச்சியுடன் தங்கள் காதல் ஜோடியை கரம் பிடித்தனர். உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ரஷியா தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது.
ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த போரில் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன.
மேலும் ரஷியாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. இதனையடுத்து உக்ரைனுக்கு எதிரான போருக்கு தேவையான ராணுவ படைகளை திரட்ட ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் போருக்கு செல்வதற்கு முன்பாக ரஷிய ராணுவத்தைச் சேர்ந்த 43 வீரர்களுக்கு மாஸ்கோ நகரில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.
ராணுவ உடையணிந்தபடி திருமணத்தில் கலந்து கொண்ட ரஷிய ராணுவ வீரர்கள், மகிழ்ச்சியுடன் தங்கள் காதல் ஜோடியை கரம் பிடித்தனர்.
இந்த திருமண நிகழ்ச்சி மிக எளிமையான முறையில் நடைபெற்றது. ரஷ்ய ராணுவ வீரர்கள்