இன்று இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.
அதற்கமைய, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 40 ரூபாவினாலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய விலை திருத்தத்தின்படி, ஒக்டேன் 92 லீற்றர் பெற்றோலின் விலை 370 ரூபாவாகவும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 415 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.