பலாலி வள்ளுவர் புரத்தில் வீதியில் சென்ற சிறுமியின் சங்கிலியை அபகரித்துத் தப்பித்தவர் பொதுமக்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத்தில் பணியாற்றுபவரே இவ்வாறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று (22) சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது.

15 வயதுச் சிறுமி தனியார் கல்வி நிலையத்துக்கு சென்றுவிட்டு வீடுதிரும்ப வீதியில் நடந்து சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தவர் சங்கிலியை அபகரித்துவிட்டு சிறுமியை கீழே தள்ளிவிட்டுத் தப்பித்துள்ளார்.

சிறுமி காயத்துக்குள்ளாகிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் ஊரவர்கள் ஒன்றிணைந்து வழிப்பறி கொள்ளையனை மடக்கிப்பிடித்தனர்.

இராணுவத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றுசிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் கொல்லங்கலட்டியை சேர்ந்தவரே இவ்வாறு மக்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பலாலி பொலிஸ் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் சங்கிலியும் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபரை பொலிஸார் அழைத்துச் சென்ற போது இராணுவத்தினர் தலையீடு செய்ததால் குழப்பநிலை ஏற்பட்டது. எனினும் மக்களின் எதிர்ப்பால் இராணுவத்தினரின் இடையூடு கைவிடப்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version