சென்னை: தனது பிள்ளையை பிரிந்து இருக்க முடியாது என்கிற காரணத்தை சொல்லியே பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜிபி முத்து அதிகாரப்பூர்வமாக வெளியேறி உள்ளார்.

கன்ஃபெஷன் ரூமில் இருந்து அப்படியே கொள்ளைப் புறமாக அவரை வீட்டில் இருந்து அவரது விருப்பத்திற்கு ஏற்ப கமல் அனுப்பி வைத்தார்.

பணம் காசோடு பிள்ளைகள் தான் முக்கியம் என ஜிபி முத்து பேசும் போது ஒரு நிமிடம் கமலே கலங்கி விட்டார்.

சிரிக்க வைத்த மனுஷன்

பிக் பாஸ் சீசன் 6ஐ ரசிகர்களை பார்க்க உதவிய மனுஷன் ஜிபி முத்து என்று தான் சொல்ல வேண்டும்.

அவரது வெள்ளந்தியான பேச்சும் வட்டார வழக்கும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஏகப்பட்ட பேர் ஜிபி முத்துவின் சேட்டைகளை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்த நிலையில், அத்தனை பேரையும் வருத்தம் கொள்ள செய்யும் அளவுக்கு ஜிபி முத்து இப்படியொரு அதிரடி முடிவை எடுத்து விட்டார்.

நடையை கட்டிய ஜிபி முத்து

ஜிபி முத்துவை எப்படியாவது வெளியே அனுப்பி விட வேண்டும் என்பதில் கமல் குறியாகவே இருந்ததாக நெட்டிசன்கள் ஒரு பக்கம் கலாய்த்து வந்தாலும், ஜிபி முத்துவை வீட்டிலேயே இருக்க வைக்கும் முயற்சிகளையும் கமல் ஓரளவுக்கு எடுத்தார்.

ஆனால், அதெல்லாம் வேண்டாம், நான் வெளியே போகிறேன், என் பிள்ளைங்க கூட தூங்கணும் என அவர் சொல்லிய இடம் பலருக்கும் கண்ணீர் வரவழைத்து விட்டது.

 பணங்காசை விட

பெத்தக் குழந்தையை எல்லாம் விட்டு விட்டு பெண் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வந்து பேரும் புகழும் சம்பாதிக்க போராடிக் கொண்டிருக்கும் நிலையில், பணங்காசை விட பிள்ளைங்க தான் முக்கியம் என ஜிபி முத்து வெளியேறியதை பார்த்து கமலே ஒரு நிமிஷம் கண் கலங்கி விட்டார்.

மோசமான எக்ஸிட்

ஜிபி முத்துவின் ஆசையை ஹவுஸ்மேட்கள் முன்னிலையிலேயே வெளிப்படுத்தி அவர்களுடன் சில வார்த்தைகள் பேசி விட்டு பிரியா விடை கொடுத்து சென்றிருக்கலாம்.

அல்லது, வேறு ஒரு எக்ஸிட் வழியே வெளியே வரவழைக்கப்பட்டாலும் கமல் அழைத்து சில வார்த்தைகள் பேசியிருக்கலாம். இரண்டுமே இல்லாமல் அப்படியே அவரை வெளியே அனுப்பியது மோசமான எக்ஸிட்டாகவே பார்க்கப்படுவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

கமல் பாராட்டு

பலமான ஹவுஸ்மேட்ஸை அனுப்பியதைவிட ஒரு பாசமான அப்பாவை அனுப்பியிருக்கிறோம் என ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், கமல் கொடுத்த பாராட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஜிபி முத்துவுக்கு பதிலாக மன்சூர் அலி கான் உள்ளே வரப் போவதாகவும் சில பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வருகின்றன.

இன்னொருத்தர் வாய்ப்பு

ஜிபி முத்து இந்த பிக் பாஸ் ஷோவுக்கே வராமல் இருந்திருக்கலாம். தேவையில்லாமல் ஒரு போட்டியாளரோட வாய்ப்பையே அவர் வீணடித்து விட்டார்.

படத்தோட ஷூட்டிங்கிற்கெல்லாம் சென்றால் எத்தனை நாட்கள் எங்கெல்லாம் தங்க வேண்டியிருக்கும், சும்மா கதை விடுறாரு என்றும் ஜிபி முத்து தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்து சென்றது தப்பு என நெட்டிசன்கள் அவரையும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

வீடியோ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்: https://www.tamildhool.net/vijay-tv/vijay-tv-show/bigg-boss-tamil-s6/bigg-boss-tamil-s6-22-10-2022/
Share.
Leave A Reply

Exit mobile version