மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ‘தக் லைப்’. எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் தோல்வியை தழுவியது. இதனால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப மணிரத்னம் களமிறங்கி உள்ளார். இளைஞர்களை கவரும் வகையில் ஒரு காதல் படத்தை அடுத்து இயக்க போகிறார். இதில் துருவ் விக்ரம் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையே சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் மணிரத்னம். ஆனால் சில காரணங்களால் சிம்பு நடிக்கவில்லை. இதனால் அந்த கதையை இப்போது விஜய் சேதுபதியிடம் சொல்லி ஓகே பெற்றுவிட்டாராம். ஏற்கனவே மணிரத்னத்தின் ‛செக்க சிவந்த வானம்’ படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக தற்போது டிரெண்ட்டிங்கில் உள்ள ருக்மிணி வசந்த்தை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். இவர் தமிழில் அறிமுகமானது விஜய் சேதுபதியின் ‛ஏஸ்’ படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version