பிரிட்டனின் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சூனக் அந்நாட்டு பிரதமராக பதவி ஏற்க உள்ளார். அவரைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக நடந்த பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சூனக் வென்றிருக்கிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் லிஸ் டிரஸிடம் தோல்வியடைந்தார். ஆனால் லிஸ் டிரஸ்ட் ஆறு வாரங்களுக்குள் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இப்போதைய தலைவருக்கான போட்டியில் சூனக் தனது சக எம்பிக்களின் போதுமான ஆதரவை முன்கூட்டியே விரைவாகப் பெற்றுவிட்டார்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே, முன்பு போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவு தெரிவித்த எம்பிக்கள் உட்பட, பிரதமர் பதவிக்கு போட்டியிட முன்மொழியத் தேவையான 100 எம்பிக்கள் எண்ணிக்கையை அவர் தாண்டி விட்டார்.

லிஸ் டிரஸ் ஆட்சியின் கீழான நிதி பிரச்னைகளை அவர் ஏற்கனவே கணித்திருந்தார். தலைமை பதவிக்கான போட்டியில் முன்னாள் பிரதமருடன் ரிஷி போட்டியிட்டார்.

பணவீக்க நெருக்கடியின் போது நிதியை கடனாகப் பெறுவது ஏமாற்றும் நோக்கம் கொண்டது என்று லிஸ் டிரஸ் முடிவை விமர்சனம் செய்திருந்தார். லிஸ் டிரஸின் அந்த முடிவுதான் பொருளாதாரத்தை குழப்பத்தில் ஆழ்த்தியது.

புலம்பெயர்ந்த பெற்றோரின் மகன்

1980ஆம் ஆண்டு பிரிட்டனின் செளத்தாம்டனில் ரிஷி சூனக் பிறந்தார். இவரது தந்தை பொது மருத்துவர் ஆக இருந்தார்.

இவரது தாயார் சொந்த மருந்தகத்தை நடத்தி வந்தார். சூனக்கின் பெற்றோர் கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு வந்தவர்கள். இருவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இப்போது சூனக் முதலாவது பிரிட்டிஷ்-ஆசிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

7 ஆண்டுகளாக எம்பியாக தொடர்ந்து வருகிறார். ரிஷி சூனக் முதலில் கடந்த 2015ஆம் ஆண்டு வடக்கு யார்க்ஷயரில் உள்ள ரிச்மண்ட் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விரைவாக அரசியலில் வளர்ச்சி பெற்றார். போரிஸ் ஜான்சன் ஆட்சியில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிதி அமைச்சரானார்.

கோவிட் ஆதரவு நிதி உதவியின் பொறுப்பாளராக ரிஷி இருந்தார். போரிஸ் ஜான்சன் நிதி துறையை கவனித்தபோது, கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் சூனக் அவரின் பின்னணியில் இருந்து கொரோனா காரணமாக வேலை இழந்த தொழிலாளர்களுக்கான ஃபர்லோ பேமெண்ட்கள் எனப்படும் நிதி உதவி மற்றும் உணவகங்களுக்கான “உதவி செய்ய சாப்பிடுங்கள்” என்ற திட்டம் உள்ளிட்ட திட்டங்களை கவனித்துக் கொண்டார்.

பணக்கார எம்பிக்களில் ஒருவர் ரிஷி

ரிஷியின் மனைவி அக்ஷதா மூர்த்தி இந்திய கோடீஸ்வரரும், இன்போசிஸ் நிறுவனருமான நாராயண மூர்த்தியின் மகளாவார்.

சூனக் கோல்ட்மேன் சாக்ஸ் முதலீட்டு வங்கி மற்றும் இரண்டு ஹெட்ஜ் நிதிகளில் பணியாற்றி உள்ளார். சூனக் மற்றும் அவரது மனைவியின் சொத்து மதிப்பு 730 மில்லியன் பவுண்ட் மதிப்புடையது என சண்டே டைம்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மனைவியின் வரி ஏற்பாடுகள் குறித்த சர்ச்சைகளை ரிஷி சூனக் எதிர்கொண்டார். ரிஷி சூனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி வெளிநாடுகளில் பெரும் வருவாய் ஈட்டியபோது அதற்கு பிரிட்டனில் வரி செலுத்தவில்லை என்று புகார் எழுந்தது. ஆனால், அந்த தருணத்தில் தனது மனைவிக்கு சூனக் ஆதரவு தெரிவித்தார்.

“என்னை குறிவைத்து என் மனைவியைக் கொச்சைப்படுத்துவது மோசமானது” என்று கூறியிருந்தார்.

எனினும் கூட சூனக்கின் மனைவி அவருக்கான கூடுதல் வரியை செலுத்தத் தொடங்கினார். இது தவிர சூனக் நிதி அமைச்சராக இருந்தபோது அமெரிக்க குடியுரிமைக்கான நிரந்தர கிரீன் அட்டை வைத்திருந்ததை நாம் கண்டறிந்தோம்.

பிரெக்சிட் மற்றும் கட்டுப்பாடு நீக்கத்திற்காக பிரசாரம்

“துறைமுகங்களின் சுதந்திரம்” என்பது அவரது நீண்டகால விருப்பமான யோசனைகளில் ஒன்றாகும். துறைமுகங்கள் அல்லது விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள இடங்களில் வர்த்தகத்தை ஊக்குவிக்க ஏற்றுமதி இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்.

உண்மையில் ஒரு ஜெடியாக இருக்க விரும்பினார்

2016ஆம் ஆண்டில், பள்ளிக்குழந்தைகள் குழுவிடம், தான் வளர்ந்தவுடன் முதலில் ‘ஜெடி நைட்’ ஆக விரும்புவதாகக் கூறினார். அவருக்கு பிடித்தது ஸ்டார் வார்ஸ் திரைப்படம் தி எம்பயர் ஸ்ட்ரைக்ஸ் பேக் என்று கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version