அகமதாபாத்: குஜராத்தில் சலூன் கடையில் முடி வெட்டிக்கொண்டிருக்கும் போது இளைஞரின் தலை முழுவதும் தீப்பிடித்து எரியும் திக் திக் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தற்போது அந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய நவீன காலத்தில் சிகை அலங்காரம் கூட மாறுபட்டு விட்டது.

ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் தங்களின் முக அழகிற்கு ஏற்றாற்போல முடிகளை வெட்டி வருகின்றனர்.

குறிப்பாக தற்போதைய 2கே கிட்ஸ்கள் முடிகளை நீளமாக வளர்ப்பது.. முடிகளில் கலரிங் செய்வது.. மாடல் மாடலாக டிரிமிங் செய்வது என பல டிசைன்களில் முடிகளை வெட்டி வருகின்றனர்.

ஃபயர் ஹேர் கட்டிங்
ஒரு சிலர் திரைப்பட நடிகர்களை போன்று முடிவெட்டுவதும், தாடி விடுவதும் என பல வித்தியாசமான செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

அதிலும் தற்போது சலூன் கடைகளில் ஃபயர் கட்டிங் மிகவும் பிரபலம். தீப்பிடிப்பதற்கான பொடிகளை தலைமுடியில் தூவி பின்னர் தீயை பற்றவைத்து ஸ்டைலாக, மாடலாக முடி வெட்டுவதற்கு ஃபயர் கட்டிங் என்று பெயர்.

தற்போது இது போன்ற ஹேர் கட்டிங் முறையே இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இளைஞர்கள் பலரும் இது போன்ற ஹேர் கட் செய்து வருகின்றனர். சரியான முறையில் கையாளவிட்டால் சில சமயம் ஃபயர் கட் முறை உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.

அந்த வகையில் குஜராத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் சலூன் கடைக்கு சென்று ஃபயர் கட் செய்ய முயன்ற இளைஞரின் தலை மட்டும் இன்றி மார்பு, கழுத்து பகுதிகளிலும் தீப்பிடித்து எரிந்துள்ளது.

தற்போது அந்த இளைஞர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுதொடர்பான அதிர்ச்சியடைய செய்யும் வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தீப்பிடித்து எரிந்த தலை
அந்த வீடியோவில், இளைஞர் ஒருவருக்கு பையரிங்க் ஹேர் கட் செய்வதற்காக சலூன் கடையில் இருக்கும் நபர் தயாராகுகிறார்.

அப்போது அவர் அந்த இளைஞரின் தலையில் தீப்பிடிப்பதற்கான பொடியை சற்று அதிகமாக தூவியதாக தெரிகிறது.

இருந்தாலும் அந்த இளைஞரின் தலையை தவிர மற்ற இடங்களை துணியால் முழுவதும் மூடியிருக்கிறார்.

தொடர்ந்து அந்த இளைஞரின் தலையில் தீயை பற்ற வைக்கிறார். தீயை பற்ற வைத்த அடுத்த நொடி அவரது தலை முடி முழுவதும் தீப்பிடித்து எரிகிறது. முடி திருத்துபவரும் தன்னால் முயன்ற அளவுக்கு வேகமாக ஹேர் கட் செய்ய முயல்கிறார்.

அய்யோ..அம்மா..
என கதறியபடி ஆனால் அவரால் வேகமாக செயல்பட முடியவில்லை. மேலும் தீயும் மளமளவென பற்றி எரிந்ததால் அந்த இளைஞர் வலி தாங்க முடியாமல் கதறுகிறார்.

இதனால் முகம் மற்றும் உடலை மூடியிருந்த துணியால் அந்த இளைஞர் தீயை அணைக்க முயல்கிறார்.

ஆனாலும் தீ அணைந்தாபாடில்லை. இதனால் வலி தாங்க முடியாமல் அய்யோ..அம்மா.. என கதறியபடி சலூனை சுற்றி.. சுற்றி.. ஓடுகிறார்.

முடி வெட்டிக்கொண்டிருந்தவரும் தீயை அணைக்க இளைஞரின் பின்னாலேயே ஓடுகிறார். எனினும் அந்த இளைஞர் கதறிக்கொண்டு அங்கும் இங்குமாக ஓடுகிறார். இவ்வாறு அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.

விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், ”வாபி பகுதியை சேர்ந்த ஆரிப் என்ற இளைஞர் தலையில் தான் தீப்பிடித்தது என்றும் உடனடியாக அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தீவிர் சிகிச்சை அளிப்பதற்காக தற்போது அவர் சூரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சலூன் கடைக்காரர் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினர்.

ஹேர் கட் செய்ய சென்ற இளைஞரின் தலை தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share.
Leave A Reply

Exit mobile version