கிளிநொச்சி, பளை பகுதியிலுள்ள பாடசாலை யொன்றில் பாடசாலை மாணவிகள் சிலர் தமது தொடையில் ஆங்கில எழுத்துக்கள் பொறித்த நிலையில், பாடசாலை நிர்வாகத்தினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி, பளை பகுதியிலுள்ள பாடசாலை யொன்றில் பாடசாலை மாணவிகள் சிலர் தமது தொடையில் ஆங்கில எழுத்துக்கள் பொறித்த நிலையில், பாடசாலை நிர்வாகத்தினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
15 வயதான மாணவிகள் சிலர் தமது தொடையில் ஆண் நண்பர்களின் பெயரை பொறித்துள்ளதாக பாடசாலை நிர்வாகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 5 மாணவிகள் அடையாளம் காணப்பட்டனர்.
எனினும்அவர்கள் பெயர் பொறிக்கவில்லை. ஆங்கில எழுத்துக்களை மட்டுமே பொறித்திருந்தனர். குறிப்பிட்ட பெயர்களின் சுருக்கமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நெருப்பில் சூடு வைத்து அந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து மாணவிகள் எச்சரிக்கப்பட்ட, பெற்றோர் அழைக்கப்பட்டு அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்பட்டனர்.