ஏவுகணை தாக்குதலை இடைமறித்து தகர்க்கும் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. புதுடெல்லி, எதிரி நாடுகளின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் ஏடி-1 என்ற ஏவுகணையை இந்தியா உருவாக்கி உள்ளது.

அதன் முதலாவது சோதனை, நேற்று ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவில் நடத்தப்பட்டது. வெவ்வேறு இடங்களில் இலக்குகள் வைக்கப்பட்டன.

அந்த இலக்குகளை ஏடி-1 ஏவுகணை வெற்றிகரமாக தாக்கியது. அனைத்து சாதனங்களும் எதிர்பார்த்ததுபோல் சிறப்பாக இயங்கின.

இதையொட்டி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ஏவுகணை, உலகத்தில் ஒருசில நாடுகளிடம் மட்டுமே இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version