நீண்ட நாட்களின் பின்னர் 26 வயது ஜினத்தின் வாழ்க்கை சிறப்பானதாக அமைவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
ஜூனில் அவர் பாத்திமாவை மணம் முடித்தார் அது காதல் திருமணம் தங்கள் பெற்றோர்களின் சம்மதத்தை பெறுவதற்காக அவர்கள் 8 வருடங்கள் போரடினார்கள்.
இறுதியாக ஜினாத் கொரியா வந்தவுடன் இருவருடைய பெற்றோரும் இணக்கம் தெரிவித்தனர் அவர்களின் முதலாவது பிள்ளையின் வரவிற்காக அவர்கள் காத்திருந்தனர்.
தென்கொரியாவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஹலோவின் தள்ளுமுள்ளில் சிக்கி ஜினாத் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அவரது மனைவியின் கனவுகளை முற்றாக சிதறடித்துள்ளது.
கொரியாவில் கல்விகற்பதற்கு திட்டமிட்டிருந்த அவரின் தற்போதைய ஒரேயொரு வேண்டுகோளாக தயவு செய்து எனது கணவரை இலங்கைக்கு அனுப்புங்கள் என்பது மாத்திரமே காணப்படுகின்றது.
இறுதிமரியாதை செலுத்துவதற்காக தனது கணவரின் உடலை கேட்பதை தவிர அவரிடம் வேறு வார்த்தைகள் இல்லை என்கின்றார் உயிரிழந்தவரின் நெருங்கிய நண்பரும் உடலை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவருமான இபாம்.
இதனை அவர் கொரியா ஹெரல்டிற்கு தெரிவித்தார்.
நாங்கள் உடலை அனுப்புவதற்காக கொரியாவிற்கான இலங்கை தூதரகத்துடன் இணைந்து முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் உடலை இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கை மிகவும் மெதுவாக இடம்பெறுகின்றது என அவர் குறிபிட்டார்.
ஜினாத்திற்கு பெரும் குடும்பபொறுப்பிருந்தது பாத்திமா கர்ப்பிணியாகயிருந்தார், ஜினத்தின் குடும்பத்தை பராமரிக்கும் ஒரேயொரு நபர் அவரே, அவரது தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் தந்தை நீரிழிவு நோயாளி அவரது மூத்த சகோதாரர் மனோநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜினாத் பணம் உழைப்பதற்காக கொரியா வந்தார் தனது தாயின் மருத்துவதேவைகளிற்காக பணம் உழைப்பதற்காக தனது சகோதரரை வெளிநாட்டிற்கு அனுப்ப வீடொன்றை கட்ட என அவருக்கு பல கனவுகள் இருந்தன என்கின்றார் ஜினாத்துடன் இணைந்து பணியாற்றிய காதிர்.
அவர் இரவு விடுதிகளிற்கு செல்பவர் இல்லை அன்றிரவு நடப்பதற்கே வெளியில் சென்றார் என அவர் குறிப்பிடுகின்றார்.
அவர் எங்களை விட்டு செல்வதற்கான நேரம் இதுவல்ல எங்களால் நம்பமுடியவில்லை என்கின்றார் அவர்.
சனிக்கிழமை இரவு 9 மணிக்கு பின்னர் ஜினாத்தை தொடர்புகொள்ள முடியவில்லை என்கின்றார் ரிகாஸ் மறுநாள் காலை புகையிரத நிலையமொன்றில் அவரது கையடக்க தொலைபேசி மீட்கப்பட்டது.
இதன் பின்னர் ஜினாத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினமான விடயமாக காணப்பட்டது, என ரிகாசும் ஏனையவர்களும் தெரிவிக்கின்றனர்.
உடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு உதவுவதாக இலங்கை தூதரகமும் தென்கொரிய அரசாங்கமும் தெரிவித்துள்ள போதிலும் செலவுகள் குறித்து குடும்பத்தவர்கள் கவலை கொண்டுள்ளனர்.