வீட்டார் மேல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வேளை கீழ் வீட்டில் 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் திருட்டு போயுள்ளது.

யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் நேற்று (06) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த வீட்டானது. மேல் மாடி வீடாகும். அந்த வீட்டில் வசிப்போர் மேல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வேளை, கீழ் வீட்டின் கதவினை நூதனமான முறையில் திறந்து உள்நுழைந்த திருடர்கள் , கீழ் வீட்டில் இருந்த 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணத்தினை திருடி சென்றுள்ளனர்.

வீட்டார் தூக்கத்தால் எழுந்து கீழே வந்த போது , வீட்டின் கதவு திறந்து இருப்பதனை கண்ணுற்று வீட்டினுள் பணம் வைத்த இடத்தை பார்த்த போது , அங்கு வைக்கப்பட்டு இருந்த 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயிருந்தது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் , நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version