பகுதி நேர வகுப்புகளுக்கு செல்வதாக கூறி விடுதிகளில் தங்கியிருந்த மூன்று இளம் வயது ஜோடிகளை கைது செய்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளியாபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்கள் வீடுகளில் இருந்து பகுதி நேர வகுப்புகளுக்கு செல்வதாக கூறி வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளம் வயதுடைய மாணவ,மாணவிகள் பகுதி நேர வகுப்புகளைத் தவிர்த்துவிட்டு விடுதிகளுக்கு செல்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய நீதவானிடம் இருந்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தேடுதல் உத்தரவுக்கு அமைய குறித்த விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த 3 இளம் ஜோடிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த தேடுதல்களின் போது விபச்சாரத்தில் ஈடுபட்ட நான்கு பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பின்னர், குறித்த இளம் ஜோடிகளின் பெற்றோரை பொலிஸாருக்கு வரவழைத்து கடுமையாக எச்சரித்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், இளம் ஜோடிகளுக்கு அடைக்கலம் கொடுத்த விடுதிக்கு பொலிஸார் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு விபச்சாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version