அமெரிக்க வரலாற்றில் இந்தியர் ஒருவர் லெப்டினன்ட் கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

அமெரிக்காவின் தலைநகரை ஒட்டியிருக்கும் மேரிலேண்ட் மாநிலத்தில் நேற்று (8-11-22) நடந்த லெப்டினன்ட் கவர்னர் பதவிக்கான தேர்தலில் வென்றிருக்கிறார் அருணா மில்லர்.

அமெரிக்க வரலாற்றில் இந்தியர் ஒருவர் லெப்டினன்ட் கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். இந்தியாவின் ஆந்திராவில் பிறந்த அருணா மில்லர், அமெரிக்காவுக்கு தன் பெற்றோருடன் குடிபெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

58 வயதான அருணா மில்லர் மேரிலேண்ட் ஹவுசின் முன்னாள் பிரதிநிதியாக இருந்தவர். வெஸ் மூர் என்பவருடன் இணைந்து அருணா மில்லர் இந்த லெப்டினன்ட் கவர்னர் தேர்தலில் போட்டியிட்டார்.

கவர்னர் பதவிக்கு அடுத்தபடியாக, உயர்ந்த பதவி என்பது லெப்டினன்ட் கவர்னர் பதவிதான். அதன்படி, கவர்னருக்கு ஏதேனும் இயலாமை நிலவும் போதோ, அவர் வேறு மாநிலத்தில் இருந்தாலோ அந்தப் பணிகளை லெப்டினன்ட் கவர்னர் மேற்கொள்வார்.

அதுமட்டுமல்லாமல் கவர்னர் இறந்தாலோ, பதவி விலக நேரிட்டாலோ, ராஜினாமா செய்தாலோ இவர் கவர்னராகப் பதவி ஏற்கலாம்.

நேற்று மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன், அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்ட மூரும் மில்லர் கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் மூருக்கும், அருணா மில்லருக்கும் ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version