பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பிரிவில் முதலாம் வருடத்தில் கல்வி கற்ற நிலையில், விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்த மாணவி ஒருவரின் உடல் அவயவங்களால் இருவர் உயிர் பிழைத்துள்ளனர்.

மாத்தறை- தங்கல்ல பகுதியைச் சேர்ந்த லக்சானி கலப்பதி என்ற மாணவி கடந்த 31ஆம் திகதி பல்கலைக்கழகத்திலிருந்து விடுதி நோக்கி சென்ற போது வாகன விபத்துக்கு முகம்கொடுத்து பலத்த காயங்களுடன் கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவரது மூளைச்சாவு அடைந்ததையடுத்து அந்த மாணவியின் உடல் அவயவங்களை நோயாளர்களுக்கு வழங்க அவரது பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய மாத்தளையைச் சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவருக்கும் இரத்தினபுரியைச் சேர்ந்த 27 வயது இளைஞருக்கும் மூளைச்சா​வடைந்த மாணவியின் இரண்டு சிறுநீரகங்களும் வெற்றிகரமாக ​பொருத்தப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version