மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில்

கல்கமுவ, இஹலகம பகுதியில் நேற்றிரவு (17) இடம்பெற்ற விபத்தில் இராணுவ மேஜர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த கார் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றுடன் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து இடம்பெற்ற வேளையில் காரில் ஐவர் பயணித்துள்ளனர். ஆனமடு திசையிலிருந்து கல்கமுவ நோக்கி பயணித்த குறித்த கார், புத்தளம் – ஆனமடு வீதியில் இஹலகம பிரதேசத்தில் சாரதியினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போன நிலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 5 பேரும் அநுராதபுரம் மற்றும் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இராணுவ மேஜர் உள்ளிட்ட மூவர் மரணமடைந்துள்ளனர்.

அநுராதபுரம், சாலியபுர இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் 35 வயதான இராணுவ மேஜர் தினேஷ் இலங்கரத்ன மற்றும் கல்கமுவ, நொச்சிய, வன்னிக்குடாவெவ பிரதேசத்தில் வசிக்கும் 30, 36 வயதுடைய இருவர் ஆகியோரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version