அதிர்ஷ்டம்
திருமண நாள் மற்றும் பிறந்த நாட்களை வைத்து லொட்டரி சீட்டுக்களை எடுத்த கனடாவில் வசிக்கும் தமிழருக்கு இரண்டாவது முறையும் பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
ஒன்றாறியோவின் மர்கம் நகரில் வசிப்பவர் பாலதாசன் பாலசுப்ரமணியம். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாலதாசனுக்கு Daily Keno லொட்டரியில் கனேடிய $25,000 (ரூ. 67,79,981.86) பரிசு விழுந்தது.
இரண்டாம் முறை
திருமண நாள் கொண்டு வந்த அதிர்ஷ்டம் – ஒரு லட்சம் கனேடிய டொலர்களுக்கு அதிபதியாகிய தமிழர்..! | Canada Lottery Winner Tamil Wedding Day India Luck
லொட்டரி விளையாட்டு என்றால் விடாமுயற்சி மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றின் கலவை என்ற நிலையில் தொடர்ந்து அதில் பாலதாசன் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து இரண்டாம் முறையாக அவருக்கு $100,000 (ரூ. 2,71,23,546.25) பரிசு விழுந்துள்ளது.
இது குறித்து பாலதாசன் கூறுகையில், பிறந்தநாட்கள் மற்றும் திருமண நாள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியின் எண்களின் தொகுப்பை வைத்து தான் லொட்டரி விளையாடுகிறேன்.
தற்போது எனக்கு பரிசு விழுந்ததா என ஸ்டோரில் சென்று பார்த்த போது திரையில் ”பெரிய வெற்றியாளர்” என காட்டப்பட்டது.
திருமண நாள் கொண்டு வந்த அதிர்ஷ்டம் – ஒரு லட்சம் கனேடிய டொலர்களுக்கு அதிபதியாகிய தமிழர்..! | Canada Lottery Winner Tamil Wedding Day India Luck
அதை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியும், மிகுந்த மகிழ்ச்சியும் ஒருசேர ஏற்பட்டது.
உடனடியாக வீட்டிற்கு சென்று என் மனைவி மற்றும் மகனிடம் தகவலை கூற, அவர்கள் உற்சாகமடைந்தனர் என கூறியுள்ளார்.
அதேவேளை, தனக்கு கிடைத்த பரிசு பணத்தை வைத்து முதலில் தனது வீட்டை புதுப்பிக்க பாலதாசன் திட்டமிட்டுள்ளார்.