♠ போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

♠  இந்த சட்டம் நேற்று முதல் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது.

போதைப் பொருள் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் நேற்று முதல் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது.

5 கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருந்தாலோ அல்லது விற்பனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நேற்று முதல் இந்த புதிய சட்டத்தின் கீழ் குற்றம்புரிந்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 19-ம் தேதி நச்சுப்பொருள், அபின், அபாயகர மசோதா சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

குறித்த மசோதாவில் கையொப்பமிட்டு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிமுகப்படுத்தினார்.

Share.
Leave A Reply

Exit mobile version