யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மாலை 6.05 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் இடம்பெற்றது.

இதன்போது மாவீரர்கள் நினைவாக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பண்டிதரின் தாயார் ஈகைச்சுடரை ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து மாவீரர் நினைவுத் தூபிக்கு பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தமிழ்த்தேசியப் பற்றாளர்கள் என பெருந்திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து மாவீரர் நினைவாகப் பயனுள்ள மரக்கன்றுகளை நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டோருக்கு வழங்கப்பட்டது.

மாவீரர் வாரம் கார்த்திகை 21 ம் திகதி ஆரம்பமாகிய நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின நினைவேந்தல் தொடர்ச்சியாக இடம்பெற்றது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இறுதியநாளான இன்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

 

Share.
Leave A Reply

Exit mobile version