கொலம்பியாவில் பெண் நீதிபதி ஒருவர் நீதிமன்ற விசாரணையின் போது கையில் சிகரெட்டுடன் உள்ளாடை மாத்திரமே அணிந்த நிலையில் வழக்கை விசாரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியாவை சேர்ந்த நீதிபதி விவியன் போலானியா என்பவர் அண்மையில் சூம் அழைப்பு (zoom call) மூலமாக , காரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டல் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார்.

இவ் விசாரணையின்போது விவியன் உள்ளாடை மேல் கோட் அணிந்திருந்தார் எனவும், கையில் சிகரெட் புகைத்தவாறு வழக்கை விசாரித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர்கள், நீதிபதி விவியனின் நடவடிக்கை மரியாதைக் குறைவாகவும் முகம் சுளிக்கும் விதத்திலும் இருந்துள்ளதாகத் தெரிவித்து அவர் மீது புகார் அளித்துள்ளனர்.

மேலும் அவர் முறையாக குற்றவாளியிடமோ, வழக்கறிஞர்களிடமோ அவர் செவிசாய்க்காமல், தனி உலகத்தில் மிதந்துக்கொண்டிருந்தார் என்றும் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் நீதிபதி பொறுப்பில் இருந்துகொண்டு அநாகரீகமாக நடந்துக்கொண்டமைக்காக , விவியனை நீதித்துறை ஒழுங்கு ஆணையம் மூன்று மாதங்களுக்கு தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version