யாழ்ப்பாணம் அரியாலையில் புகையிரதத்துடன் பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் பஸ்ஸின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை (டிச. 1) நண்பகல் ஒரு மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் பேருந்து மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.

அப்பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவை காணப்படுவதால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பிரதேச வாழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version