உக்ரைன் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க தயார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
புட்டின் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு ஆர்வமாகயிருந்தால் தான் அவரை சந்திக்க தயார் என தெரிவித்துள்ள பைடன் ஆனால் புட்டின் இதுவரை அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனை சந்தித்த பின்னர் அவருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தவேளை பைடன் இதனை தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் யுத்தத்திற்கு எதிராக தொடர்ந்தும் இணைந்திருக்கப்போவதாக இரு தலைவாகளும் தெரிவித்துள்ளனர்.
ஏற்றுக்கொள்ள முடியாத சமரசத்திற்கு இணங்குமாறு உக்ரைனை கேட்டுக்கொள்ளப்போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.