பெங்களூரு: இன்னொரு தலைமை ஆசிரியர் சில்மிஷ புகாரில் சிக்கி உள்ளார்.. போலீஸை எல்லாம் எதிர்பார்க்காமல், மாணவிகளே ஒன்றுதிரண்டு, கயிறு கட்டி அந்த தலைமை ஆசிரியரை வெளுத்து கட்டி உள்ளனர்.

பள்ளி மாணவிகள் பல இடங்களில் பாலியல் தொல்லைகளை சந்தித்து வருவது அதிகமாகிவிட்டது..

நடந்து வரும் சம்பவங்கள் எல்லாம் மிகவும் வேதனை அளிப்பதாக கல்வி அதிகாரிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவித்து வருகிறார்கள்..

ஆசிரியர்கள்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால், இவர்களை வழிநடத்தக்கூடிய தலைமை ஆசிரியர்களே பாலியல் அத்துமீறில்களில் நடந்து கொள்வது அதிர்ச்சியை தந்து வருகிறது.

வசமா சிக்கிட்டாரு

இப்படித்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவின் மைசூரு கோட்டே நகரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் நடந்தது..

அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர் பெயர் ஆர்.எம். அனில்குமார்… இவர், தன்னுடைய பள்ளி மாணவிகளிடமே அநாகரீகமாக நடந்து கொண்டும், பாலியல் தொல்லை தந்தும் வந்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பள்ளியின் மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, மாணவிகளை தன்னுடைய வலையில் வீழ்த்தும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை, கையும் களவுமாக பிடிக்க திட்டம் போட்டனர்.

மடியிலே முத்தம்

எதிர்பார்த்தபடியே, சம்பவத்தன்று, பள்ளி நடந்துகொண்டிருந்த நேரத்தில், அதுவும் பட்டப்பகலில் அந்த தலைமை ஆசிரியர் ஒரு பள்ளி மாணவியை தன்னுடைய மடியில் உட்கார வைத்து முத்தம் தந்துள்ளார்..

இதனை, அந்த பள்ளி மாணவிகள் மறைந்திருந்து வீடியோவும் எடுத்துவிட்டனர்.. இந்த விவகாரம், பள்ளி நிர்வாகத்திற்கு தெரிய வந்ததையடுத்து, உடனே பள்ளி நிர்வாகக் குழு அவசரக் கூட்டம் நடத்தி, அந்த தலைமை ஆசிரியரை பணியில் இருந்து நீக்கியது.. போக்சோவிலும் போலீசார் அவரை கைது செய்தனர்.

ஸ்கூல் கேம்பஸ்

இன்னொரு சம்பவம் இதே கர்நாடகாவில் நடந்துள்ளது.. அதேபோல ஒரு தலைமை ஆசிரியர் சிக்கி உள்ளார்.. ஸ்ரீரங்கட்டனா அருகே உள்ள கட்டேரி கிராமத்தில் ஒரு அரசுப்பள்ளி இயங்கி வருகிறது… இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் வெளியூர்களில் இருந்தும் வந்து தங்கி படிக்கிறார்கள்..

அதனால், இந்த பள்ளிக்கு ஹாஸ்டல் வசதியும் உண்டு.. இந்த பள்ளியின் தலைமையாசிரியர் சின்மயானந்த் மூர்த்தி, பள்ளி வளாகத்தில் உள்ள மாணவிகள் விடுதிக்கு பக்கத்திலேயே ரூம் எடுத்து தங்கி வேலைபார்த்து வந்துள்ளார்..

ஹாஸ்டல்

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு, தலைமை ஆசிரியர், போதை தலைக்கேறும்படி தண்ணி அடித்துள்ளார்..

மதுபோதையில் நேராக மாணவிகள் ஹாஸ்டலுக்குள் நுழைந்துவிட்டார்.. இரவு நேரம் என்பதால், மாணவிகள் அறைகளில் தூங்கி கொண்டிருந்தனர்..

தலைமை ஆசிரியர் அங்கிருந்த ஒரு ரூமுக்குள் நுழைந்து, தூங்கி கொண்டிருந்த ஒரு மாணவியிடம் அசிங்கமாக நடந்து கொண்டுள்ளதாக தெரிகிறது..

அத்துமீறி நடந்து கொண்ட தலைமை ஆசிரியரை கண்டு, அந்த மாணவி அலறினார்.. உடனடியாக சக தோழிகளிடம் சம்பவம் குறித்து தெரிவிக்க, விடுதி மாணவிகள் அனைவரும் ஒன்று திரண்டு வந்துவிட்டனர்.

நர்சிங் காலேஜ்

அந்த தலைமை ஆசிரியரையே சரமாரியாக அடித்து உதைத்தனர்.. மேலும் அவரை அந்த இடத்திலேயே கயிறு போட்டு கட்டிவைத்து போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்..

இதனை அடுத்து போலீஸார் விரைந்து வந்து, தலைமை ஆசிரியரை மீட்டு கைது செய்துள்ளனர்..

பிறகு சம்பந்தப்பட்ட மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.. இப்படித்தான், நாகை நர்சிங் காலேஜ் மாணவியை பாலியல் ரீதியாக கட்டாயப்படுத்திய ஆசிரியர் சதீஷை நேற்றுதான் போலீசார் கைது செய்து உள்ளே தள்ளியுள்ளனர். அதற்குள் இங்கே இப்படி ஒரு சம்பவம்..!!

 

Share.
Leave A Reply

Exit mobile version