வடமத்திய மாகாணத்தில், கெடடிவுல, கிராலோகமவில் ஒன்பது வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை எப்பாவல பொலிஸார் தற்போது தேடி வருகின்றனர்.

சம்பவத்தில் ஒன்பது வயதுடைய P. K. Deneth Premasundara, என்ற சிறுவனே கடத்தப்பட்டுள்ளார் என பொலஸார் தெரிவித்தனர்.

கடத்தல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான 45 வயதுடைய மின்சாரப் பணியாளராக கடமையாற்றியவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை இரவு 08.30 மணியளவில் சிறுவன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் எப்பாவல பொலிஸ் நிலையத்தை 025-224-9122 அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version