கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியிலுள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலுக்கு அமைவாக இன்று மாலை 4 மணியளவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
40 வயது மதிக்கத்தக்க ஆண் யாசகர் ஒருவரே உயிரிழந்தவர் என நியூஸ் ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
கிளிநொச்சி தடயவியல் பொலிஸார் மற்றும் நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.