பைக்கில் தன்னை பின்தொடர்ந்து வந்த ரசிகளுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா அறிவுரை கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கில் நடித்துள்ள படம் வாரசு.

இந்த படத்தின் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் தனது 2-வது படத்தில் நடித்துள்ளார். எற்கனவே சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகை ராஷ்மிகா மந்தனா நடன இயக்குனர் ஜானியுடன் இணைந்து சூப்பர்ஹிட் பாடலான “ரஞ்சிதாமே” பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

நடிகர் விஜயின் தீவிர ரசிகையான ராஷ்மிகா, வாரிசு படத்தின் மூலம் முதல் முறையாக விஜயுடன் இணைந்துள்ளார்.

வம்ச பைடிப்பள்ளி இயக்கியுள்ள வாரிசு 2023ஆம் ஆண்டு பொங்கல் வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு தவிர, ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் புஷ்பா: தி ரூல், மிஷன் மஞ்சு மற்றும் அனிமல் ஆகிய படங்கள் உள்ளன.

இந்நிலையில், வாரிசு இசை வெளியீட்டு விழா முடிந்து காரில் திரும்பிக்கொண்டிருந்த ரஷ்மிகாவை ரசிகர்கள் இரண்டு பேர் காரில் ஃபாலோ செய்து வருகின்றனர்.

ஸ்போர்ட்ஸ் பைக்கில் வந்த அந்த ரசிகர்கள் ராஷ்மிகாவுடன் பேச முயறசிக்கின்றனர்.

அப்போது திடீரென ராஷ்மிகாவின் கார் நின்றதும், இரண்டு ரசிகர்களும் அவருடன் பேசுவதற்கு அருகில் வர முடியாமல் தவித்தனர்.


அப்போது நடிகை ராஷ்மிகா அவர்களை திட்டுவார் என்று எதிர்பார்த்தால் அதுதான் இல்லை. ராஷ்மிகா அவர்களை ஹெல்மெட் அணியச் சொல்லியது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

“ஹெல்மெட் போட்டுக்கோங்க” என்று அவர் தமிழில் சொல்வதைக் கேட்ட ரசிகர், “சரி, அக்கா (சகோதரி)” என்று பதிலளித்தார்.

இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது, மேலும் ரஷ்மிகாவின் அணுகுமுறையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version