இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (26) அதிகாலை அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளார்.

இவரது இந்த பயணத்தில் அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோரும் இணைந்திருந்ததாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இவர்கள் எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.​கே.- 649 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 02.55 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பயணமாகியுள்ளனர்

Share.
Leave A Reply

Exit mobile version