அமெரிக்காவில் நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியும் பனியில் உறைந்து போய் காணப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

அமெரிக்காவில் கடந்த நான்கு நாட்களாக பனிப்புயல் வீசுகிறது. நாடு முழுவதும் வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டிருக்கும் நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடும் பனிப்பொழிவால், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் பனியில் உறைந்துள்ளன. மின்சாரம் தடைபட்டுள்ளது.

 

போக்குவரத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பனிப்புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுபதை கடந்துள்ளது.

பனிப்பொழிவு காரணமாக பலர் வாகனங்களிலேயே சிக்கி உயிரிழந்துள்ள காட்சிகள் வெளியாகி உள்ளன.

 

இந்நிலையில், இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியும் உறைந்து போய் காணப்படுகிறது.

சில இடங்களில் மட்டும், நீர்வீழ்ச்சியில் உள்ள பனிக்கட்டிகளையும் தாண்டி தண்ணீர் கொட்டும் காட்சிகளும், வீடியோக்களும் வெளியாகி உள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version