ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹஷீமுடன் தொடர்பில் இருந்த நபர் ஒருவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை இந்திய தேசிய புலனாய்வு முகமையினர் நேற்று (28) கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி இந்தியாவின் கோயம்புத்தூரில் காரை வெடிக்க வைத்து தகர்த்த சம்பவத்துடன் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த குறித்த சந்தேகநபருக்கு நேரடித் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சந்தேக நபருடன் தொடர்பு கொண்டிருந்த ஐ.எஸ் உறுப்பினர் ஒருவரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, தேசிய புலனாய்வு முகமை குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் “சனோபர் அலி” என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹஷீமுடன் இவர்கள் நேரடித் தொடர்பு வைத்திருந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version