>மலசல கூடத்திற்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்த 7 வயது நிரம்பிய சிறுவன் பலியான சோக சம்பவம் இன்று வியாழக்கிழமை (டிச 29)  கண்ணகிகிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிகிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் லிதிஸ் எனும் சிறுவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

குடிநீர் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ளும் குறித்த பகுதியில் மலசல கூடத்திற்காக வெட்டப்பட்ட குழியில் நிரம்பிய நீரை அவ்வப்போது சில தேவைகளுக்காக அக்குடும்பம் பயன்படுத்தியுள்ளது.

இதனை அவதானித்துள்ள அந்த சிறுவனும் அக்குழியில் யாரும் அவதானிக்க நேரத்தில் நீரை அள்ள முயற்சித்துள்ளதாகவும் இதன் காரணமாகவே அச்சிறுவன் குழியில் வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சிறுவனை காணவில்லை என தேடிய தாய் உள்ளிட்ட உறவினர்கள் இறுதியில் குழியில் அவதானித்தபோதே அங்கிருந்து சிறுவன் மீட்க்கப்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளான். ஆயினும் அச்சிறுவனின் உயிர் பிரிந்துள்ளது.

இதேநேரம் அச்சிறுவனின் தாய்க்கு இரண்டாவது பிள்ளை பிறந்து ஒரு வாரமாகிய நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரணமடைந்த சிறுவனின் உடல் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் உடற்கூற்றாய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் அக்கரைப்பற்று பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version