காந்திநகர்: பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.. இந்த தகவலை பிரதமர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.. தாயார் மறைவைத் தொடர்ந்து குஜராத் விரைகிறார் பிரதமர் மோடி.

குஜராத் மாநிலம் காந்தி நகரில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் வசித்து வந்தார்.. இவருக்கு 100 வயதாகிறது.. கடந்த ஜுன் மாதம் தான் தன்னுடைய 100வது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார்.

ஒவ்வொரு முறை மோடி, தன்னுடைய அம்மாவை பார்க்க செல்லும்போதெல்லாம், நாட்டு மக்களையும் சேர்த்தே ஈர்த்துவிடுவார் ஹீராபென்.. எப்போதுமே ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் காணப்படுவார்.

100 வயது

இவருக்கு 2 நாளைக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது… இதனால், அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..

டாக்டர்களின் உடனடி சிகிச்சையால், அவரது உடல்நிலைசீராக இருப்பதாக தகவல்கள் அடிக்கடி வெளியாகி கொண்டே இருந்தது..

தகவலறிந்ததும், நேரடியாகவே மேத்தா மருத்துவமனைக்கு சென்ற மோடி, தன் அம்மாவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.. அங்கிருந்த டாக்டர்களிடம், தாயாரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்..

 

பிரார்த்தனை

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் விரைவில் குணமடைய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

. இதே போல மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரார்த்தனை செய்வதாக தெரிவித்திரந்தார்.. பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் விரைவில் நலம் பெற்று நல்ல ஆரோக்கியமாக இருக்கவும் பிரார்த்தனை செய்யுங்கள், அவர் விரைவில் குணமடையட்டும் என்று குறிப்பிட்டிருந்தார்..

இவ்வாறு காங்கிரஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் பிரார்த்தனை செய்வதாகவும், விரைவில் அவர் உடல்நலம் தேறி வரவேண்டும் என்றும் பதிவிட்டிருந்தனர்.

உருக்கம்

பின்னர், ஹீராபென் உடல் நலம் தேறி வருவதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டு இருந்தது.. இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பிரதமர் மோடியின் தாயார் காலாமானார்..

இந்த தகவலை பிரதமர் நரேந்திரமோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

அதில் “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் உள்ளது. அம்மா… ஒரு துறவியின் பயணத்தை உள்ளடக்கிய மும்மூர்த்திகளை நான் எப்போதும் உங்களிடம் உணர்ந்தேன். ஒரு தன்னலமற்ற கர்மயோகி நீங்கள்.

மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை உங்களுடையது” என பிரதமர் மோடி உருக்கமாக பதிவிட்டுள்ளார்…

மதர் – உருக்கம்

இதைத்தொடர்ந்து மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட பிரபலங்கள் தங்கள் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். தாயார் மறைவையடுத்து, குஜராத் விரைந்துள்ளார் பிரதமர் மோடி.

பிரதமர் தன்னுடைய தாயை பற்றி பல்வேறு சமயங்களில் உணர்ச்சிகரமாக பேசுவார்.. எந்த ஒரு பொது நிகழ்ச்சி என்றாலும்கூட, அதில் தன்னுடைய அம்மாவை பெருமைப்படுத்தி பேசாமல் இருக்க மாட்டார்..

மதர் என்ற பெயரில் பிளாகையும் அவர் எழுதி இருக்கிறார்…கடந்த மாதம் குஜராத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது வந்த பிரதமர் மோடி, தன்னுடைய அம்மாவை சந்தித்து ஆசி பெற்றுவிட்டுச் சென்றிருந்தார்.


ரத்தானது
எந்த ஒரு தேர்தல் என்றாலும், தவறாமல் வாக்களிக்க வந்துவிடுவார் ஹீராபென்.. சமீபத்தில் குஜராத்தில் 2வது கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடந்தபோதுகூட, சக்கரநாற்காலியில் வந்து வாக்களித்துவிட்டு சென்றிருந்தார்.

. வாக்களிக்க வந்திருந்தபோது, பிரதமர் மோடி, ஹீராபென்னை சந்தித்து ஆசி பெற்றுவிட்டு சென்றிருந்தார்.

தாயார் மறைவைத் தொடர்ந்து குஜராத் விரைந்துள்ளார் பிரதமர் மோடி.. அந்தவகையில், மேற்கு வங்கத்தில் இன்று மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மேற்கு வங்கத்தில் நடைபெறும் திட்டப்பணிகளில் காணொலி வாயிலாக பிரதமர் பங்கேற்பார் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version