மட்டக்களப்பு மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் திடீர் மரணமடைந்த நிலையில் இறுதிக்கிரியையின் போது காதலன் செய்த செயற்பாடு அங்கிருந்த அனைவரையும் மனம் நெகிழ வைத்திருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
10வருட காலமாக 22வயதுடைய பெண்ணும் இளைஞனும் காதலித்து வந்தனர். இந்நிலையில் குறித்த பெண் கடந்த 29.12.2022 அன்று திடீர் மரணமடைந்த நிலையில் பெண்ணின் இறுதிக்கிரியைக்கு சென்ற காதலன் உயிரிழந்த தனது காதலிக்கு தாலி கட்டி அவரை சுமங்கலியாக வழியனுப்பிவைத்தார்.
அதேவேளை கடந்த காலங்களில் இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருப்பினும் இலங்கையில் குறிப்பாக மட்டக்களப்பில் இதுவே முதல் சம்பவமாக பதிவாகியுள்ளதுடன்.
இளைஞன் தனது காதலிக்கு தாலி கட்டும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.