கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்து காலி கராப்பிட்டய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பத்தேகம மற்றும் பின்னதுவ ஆகிய இடங்களுக்கு இடையிலான 88 ஆவது கிலோ மீற்றர் கல்லுக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்து, சாரதி உறங்கியதன் காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார். தெரிவித்தனர்.

கதிர்காமத்துக்குச் சென்று திரும்பிய மத்துகமையைச் சேர்ந்த யாத்திரிகர்கள் குழுவொன்றே குறித்த பஸ்ஸில் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்தின் போது பஸ்ஸின் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்த பஸ் சுமார் 100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version