முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அமெரிக்க குடியுரிமையை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார்.

இதற்கு முன்னர் இரத்துச் செய்யப்பட்டிருந்த குடியுரிமையை மீளப் பெறுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி விண்ணப்பித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமது அமெரிக்க குடியுரிமையை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நீக்கிக் கொண்டார்.

பதவி நீக்கத்தின் பின்னர் அவர் எந்த நாட்டிலும் புகலிடம் கோராத காரணத்தினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸ கடந்த ஜூலை மாதம் நாட்டிலிருந்து வௌியேறி பின்னர் 02 மாதங்களில் மீண்டும் நாட்டிற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply

Exit mobile version